சூடான செய்திகள் 1

பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் மகனை அடித்து கொலை செய்த தந்தையும் மருமகனும் கைது

(UTV|NUWARA ELIYA)-பொகவந்தலாவ, பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ​நேற்று (08) இரவு 08 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறி தந்தையும் மருமகனும் இணைந்து தடியால் தாக்கியமை காரணமாக மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இருவர் இணைந்து குறித்த நபரை தலைபகுதியில் கடுமையாக தாக்கியமையால் அதிகமான இரத்தம் வெளியேறிமையின் காரணமாகவே குறித்த நபர் மரணித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

உயிரிழந்தவர் 37 வயதுடைய ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் காணபட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யபட்டவரின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு ஹட்டன் நீதிமன்ற நீதவானின் மரண விசாரனையின் பின்னர் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தாக்குதல் நடத்திய 72 மற்றும் 23 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் இன்று (09) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/NORTH-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/NORTH-3.jpg”]

 

மு.இராமசந்திரன்

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி

இடியுடன் கூடிய மழை

“ஊறு ஜுவா” வின் சகாக்கள் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது