சூடான செய்திகள் 1

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நேற்று வெளியிட்ட விசேட அறிவித்தலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டையை அண்டிய பகுதியில் சில வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதத் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு மேலதிக பாதுகாப்பு தரப்பினர், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலைமை அமைதியக உள்ளது.

இந்த நிலையில், தற்போதைய குழப்ப நிலைமையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான சூழலை உருவாக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு