வகைப்படுத்தப்படாத

ரஷ்ய இராணுவ விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் இராணுவ விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவிற்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று நேற்று சிரியாவில் விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பணிபுரிந்த 6 பேர் உட்பட 32 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சு அறிவித்திருந்த நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான தளத்தில், விமானம் இறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் 6வது நாள் இன்று

Serkis, Knight, Wyatt up for “Venom 2”

Class 12 girl drugged, raped by friend’s boyfriend – [VIDEO]