வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பாரிய நில நடுக்கம்

(UTV|COLOMBO)-பப்புவா நியூ கினியா தீவில் 6 மெக்னிடியூட் அளவிரான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த நில அதிர்வு ஏற்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா தீவில் கடந்த வாரம் இடம்பெற்ற 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வில் 31 பேர் வரையில் பலியானமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජනාධිපතිවරණයට පෙර මහ බැංකු අධිපති තනතුරෙන් ඉවත් වීමට යයි

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Holloway retains UFC Featherweight Title