சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று (01) காலையில் பறக்க விடப்பட்டு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது.

200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக புணரமைப்பு செய்யப்படவில்லை. ஒரு வழி பாதையாக காணப்படும் இந்த பிரதான வீதி பாலத்தில் பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் பலர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பாலத்தின் நடுவே 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று காலை பறக்க விடும் போது இது பாதுகாப்பு எச்சரிக்கையாக இருக்கும் என கருதியதாகவும் மாலையில் அகற்றப்பட்டதும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது

குறித்த கொடியினை அருகிலுள்ள இராணுவத்தினரே நட்டதாகவும் மாலையில் அவர்கள் கழற்றி சென்றதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர் இது எதற்காக நடப்பட்டது என மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதாக அறியமுடிகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பெண்களுக்கு தனியான இட வசதி…

இன்றைய வானிலை…

கெசல்வத்தை – வேல்ல வீதி துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்