(UTV|COLOMBO)-தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார புத்தெழுச்சியை நோக்கி ஒன்றிணைந்த 100 கடன் முன்மொழிவு முறைமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் அரச வங்கிகளின் தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க,தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரண, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் அரச வங்கிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]