உலக தமிழர் பேரவை , பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் உலக தமிழர் பேரவையினால் அனுப்பட்டுள்ள கடிதத்தில், பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ இலங்கைக்கு திருப்ப அழைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் விஸா அனுமதியையும் ரத்துச் செய்ய வேண்டும் எனவும் உலக தமிழர் பேரவையின் ஊடக பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த கடிதத்திற்கு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தின் தெற்காசியாவுக்கான திணைக்களம் பதில் வழங்கியுள்ளது.
கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதுதொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை நேரடியாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்ததாகவும் அந்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, குறித்த சம்பவத்தை அடுத்து பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.