சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்

(UTV|KILINOCHCHI)-யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து  காணால்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தங்களின் உறவுகளுக்கு நீதி  கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  போராட்டம் இன்று(19) 365 வது நாளாக தீர்வின்றி இரவு பகலா தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின்   போராட்டம் தொடர்கிறது.
இதேவேளை  இனிவரும் நாட்களில் தங்களின்  போராட்ட வடிவத்தை மாற்றவுள்ளதாக கிளிநொச்சியில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.என்.நிபோஜன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதை அறிவிக்க தொலைபேசி இலக்கம்…

சில பிரதேசங்களுக்கு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை