வகைப்படுத்தப்படாத

நல்லாட்சி அரசாங்கத்தை ஆராய குழு

(UTV|COLOMBO)-நல்லாட்சி அரசாங்கத்தை அவ்வாரே எதிர்காலத்தில் கொண்டுச் செல்வது தொடர்பில் ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இதுதொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 5 உருப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 5 உருப்பினர்களையும் கொண்டதாக அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமைக்கப்பட உள்ள அந்த குழு தமது அறிக்கையை விரைவாக முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பஸ் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு