வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சிமன்ற தேர்தல் – முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்

(UTV|COLOMBO)-340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்கா அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும்.

 

பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிசமாக வாக்குகள் உள்ள நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரே இடத்தில்வைத்து எண்ணப்படும். இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின் போது மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் ஒரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் எண்ணப்படும்.மறுநாள் காலையில் முடிவுகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.  இம்முறை அவ்வாறான நடைமுறை இடம்பெறமாட்டாது.

 

நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும்.

முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும்.
மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow

உலக சனத்தொகை தினம் இன்று

கடுங்குளிருடனான வானிலையால் அவசரநிலை பிரகடனம்