வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்

(UTV|COLOMBO)-ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மத்திய நிதி காலாவதியாவதற்குள் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ரேண்ட் பால், செலவினம் தொடர்பான வரம்புகளை பராமரிப்பதில் தான் கொண்டுவந்த திருத்தங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபையில் கோரிக்கை விடுத்த போது மசோதா மீதான விரைவு வாக்கெடுப்பு கனவுகள் தகர்ந்து போனது.

கடந்த ஜனவரி மாதம், இதே போன்று ஒரு தோல்வியினால் அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை), செனட் உறுப்பினர் ரேண்ட் பால் தொடர்ந்து தனது வாக்கை பதிவுசெய்ய தாமதித்து வருவதால், ஒரு சாத்தியமான வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

செனட் மற்றும் பிரநிதிகள் சபை இரண்டும் அமெரிக்க அரசு இயங்குவதற்கான இரண்டாண்டு வரவு செலவு ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும்.

மேற்கொண்டு என்ன மாதிரியான நடவடிக்கைகளை நாடாளுமன்றம் எடுக்கப்போகிறது மற்றும் வெள்ளியன்று பொது சேவைகள் எப்படி பாதிக்கப் போகின்றன போன்ற தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த சமீபத்திய ஒப்பந்தத்தில் செலவினம் தொடர்பான வரம்புகளை 300 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, அது 215 பில்லியன் டாலராக இருந்தது.

இந்த வரம்பு அதிகரிப்பிற்கு தான் ஆதரவு தெரிவிக்க முடியாது என்று செனட் உறுப்பினர் பால் வலியுறுத்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம்

இந்தியாவில் ஒரே குடும்பத்தினர் 11 பேர் சடலமாக மீட்பு

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்