வகைப்படுத்தப்படாத

வட கொரிய தலைவரின் தங்கை தென்கொரியா பயணம்

(UTV|NORTH KOREA)-வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதாரி கிம் யோ ஜொங் தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தென்கொரியாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள, பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் அவர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் வடக்கு மற்றும் தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் அணிவகுப்பு நடத்தவுள்ளன.

வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜொங்-இல்லின் இளைய மகளான அவர், கடந்த ஆண்டு வடகொரியாவின் அரசியல் சபையில் இணைக்கப்பட்டநிலையில், அதிகாரம் பொருந்தியவராக உள்ளார்.

இந்தநிலையில் அவரது தென்கொரிய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளை மையப்படுத்தி வடக்கு மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையிலான ராஜதந்திர உறவு புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த விடயம், வடகொரியாவின் அணுவாயுத சோதனை நடவடிககைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விசேட நிதியம்

பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் வீரர்கள் பத்திரமாக மீட்பு

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு