வகைப்படுத்தப்படாத

பிணை முறி மற்றும் பாரிய ஊழல்கள் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ள சபை அமர்வு பிற்பகல் 4 மணி வரை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் விவாதத்திற்கு தமது அணி தயார் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி உண்மையை வெளிப்படுத்தவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்திற்கு மேலதிகமாக எதிர்வரும் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் இது தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது

நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி

Rahul Gandhi quits as India opposition leader