வகைப்படுத்தப்படாத

சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO)-ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழு  இன்று மீண்டும் விசாரணையை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், பதுளை காவல்துறை தலைமையக பரிசோதகர் ஈ.எம்.ரி.பீ.வி.தென்னகோனும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என ஊவா மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த அறிவுறுத்தலை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.
அத்துடன், அவருக்கு பிரிதொரு தினத்தை வழங்க முடியாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
நியாயமான காரணங்களின்றி ஆணைக்குழுவின் உத்தரவை புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு, ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும், முதலமைச்சர் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாவது நிச்சயமற்றது அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முன்னதாக பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரிடம் கடந்த 25 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சுமார் 10 மணிநேரம் விசாரணைகளை நடத்தியிருந்தது.
அத்துடன், ஊவா மாகாண கல்விச் செயலாளர், மாகாண பிரதான செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வருகிறது புதிய அலைவரிசை

14 வீரர்களுடன் சென்ற போர் விமானம் மாயம்

தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு