வகைப்படுத்தப்படாத

பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்

(UTV|COLOMBO)-பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும் என்று தான் மீண்டும் வலியுறுத்துவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

தொழில்சார் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை அமுல்படுத்த தவறினால் அதனை பொலிஸாரின் குறைபாடகவே கருத முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

கட்சி சார்பின்றி அழுத்தங்களுக்கு அடி பணியாது பொலிஸார் செயற்படுவது அவசியமாகும். பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் இணைத்துக் கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியதாக அமைச்சர் கூறினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இதற்கு அமைவாக அரசாங்கம் கைத்தொழில் பேட்டையையை உருவாக்கவுள்ளது. வேலையில்லாப் பிரச்சினைக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Rajasinghe Central and Azhar College win on first innings