வகைப்படுத்தப்படாத

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு

(UTV|COLOMBO)-இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லேரியா, களனிமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்கள் மிகவும் சூட்சுமமான முறையில், பவுசர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்ற எருபொருளின் ஒரு பகுதியை வேறொரு பவுசருக்கு மாற்றிவிட்டு, தரமற்ற எரிபொருளை அதனுடன் கலந்து விநியோகம் செய்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சுமார் இரண்டு வருட காலமாக சந்தேகநபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கம்பளை, பேராதனை, ருவன்வெல்ல மற்றும் ஹட்டன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கலாமின் இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கிய கமல்

மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நீடிப்பு

Ranjan Ramanayaka to meet the Prime Minister today