விளையாட்டு

மைதானத்தில் பறந்து பிடியெடுத்த தனுஸ்க குணதிலக

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஸ் அணி சற்று முன்னர் வரை 4 விக்கட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை , இந்த போட்டியில் பங்களாதேஸ் அணியின் முதல் 4 விக்கட்டுக்கட்டுக்களும் சுரங்க லக்மாலின் ஓவர்களில் வீழ்த்தப்பட்டன.

அதன்படி , 6 ஓவர்களை இதுவரை வீசியுள்ள சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

சகிப் ஹல் ஹுசைன் ரன் ஹவுட் முறையில் சுரங்க லக்மால் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

மேலும் , மூன்றாவதாக ஆட்டமிழந்து வௌியேறிய தமீம் இக்பாலின் ஆட்டமிழப்பு அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

சுரங்க லக்மாலினால் வீசப்பட்ட பந்து தமீம் இக்பாலினால் அடித்தாடப்பட்ட நிலையில், அதனை தனுஸ்க குணதிலக மிகவும் சிறப்பாக மைதானத்தில் பறந்து பிடியெடுத்தார்.

Related posts

உஷான் நிவங்க புதிய சாதனை

உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்

2018 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் இலங்கை பங்கேற்பு