வகைப்படுத்தப்படாத

புகையிரத மலசலகூடத்தில் குடும்பஸ்தரின் சடலம்

(UTV|COLOMBO)-புகையிரதத்தின் மலசலகூடத்திலிருந்து மர்மமான முறையில் மரணித்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதத்திலேயே குறித்த நபரின் சடலம் மலசலகூடத்திற்குள் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் இயற்கையாக மரணித்துள்ளாரா, அல்லது தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், மரணித்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

குறித்த புகையிரதத்தில் பயணித்த ஒருவர் மலசலகூடத்திற்கு சென்ற வேளையில் மயங்கிய நிலையில், குறித்த நபர் காணப்பட்டுள்ளார்.

சிறிது நேரம் அவரை விழிக்க செய்ய முயற்சித்த நபர் முடியாத தருணத்தில் புகையிரதத்தில் கடமையிலிருந்து பயணசீட்டு பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.

பரிசோதகர்கள் வருகை தந்து பார்வையிட்டதன் பின்னரே குறித்த நபர் மரணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவரின் பணம் மற்றும் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக என்பது தொடர்பிலும் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மக்கள்

අද පාර්ලිමේන්තු තේරීම් කාරක සභාවට මාධ්‍ය වාරණයක්.

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து