வகைப்படுத்தப்படாத

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

(UTV|JAFFNA)-யழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையில் நேற்றிரவு மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் 18.1.2018 அன்று இரவு 9.30 மணியளவில் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் பலமேஸ்வராச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கு பகிடிவதையே காரணமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் மீதான பகிடி வதையில் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நான்காம் வருட மாணவர்கள் இருவர் பரமேஸ்வரா வீதியால் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த மூன்றாம் வருடத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற நான்காம் வருட மாணவர்கள் தம்மை மூன்றாம் வருட மாணவர்கள் தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆயினும் இதன் போது மாணவர்கள் எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

டிக்கோயா வீதியில் ஒருவாரமாக உடைப்பெடுத்த நிர் குழாய் பொது மக்கள் விசனம்

தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சிரிய அரச படை