வகைப்படுத்தப்படாத

ரோமானியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் வியோரிகா தான்சிலா

(UTV|ROMANIA)-ரோமானியா பிரதமர் மிஹாய் டுதோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக வியோரிகா தான்சிலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான ரோமானியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரதமராக இருந்த மிஹாய் டுதோஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். சமூக ஜனநாயக கட்சியின் நீண்டகால உறுப்பினராக உள்ள டுதோஸ் மீது கட்சி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு நடத்தி டுதோஸுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்ததால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

டுதோஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். துணை அதிபர் பால் ஸ்டானெஸ்கு தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமராக வியோரிகா தான்சிலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோமானியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற உள்ள தான்சிலா ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக உள்ளார்.

ஆளும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் லிவியூ த்ராக்னே, தான்சிலாவை முன்மொழிந்துள்ளார். புதிய பிரதமரின் நியமனம் விரைவில் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பிப்ரவரி மாதத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Double-murder convict hacked to death in Hambantota

யாழ் கடலில் மிதக்கும் வீடு

Railway strike called off [UPDATE]