வகைப்படுத்தப்படாத

மடகாஸ்கரை தாக்கிய ‘அவா’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

(UTV|MADAGASCAR)-ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில், கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் ‘அவா’ புயல் தாக்கியது. இதனால் மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதில் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

இந்த புயலில் சிக்கி 29 பேர் வரை பலியானதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இந்த பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 22 பேரை காணவில்லை என அரசு அறிவித்து உள்ளது.

இதைப்போல 54 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய விபத்து மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடகாஸ்கர் தீவு அடிக்கடி புயலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கிய ‘எனாவோ’ புயலுக்கு 78 பேர் பலியானார்கள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அவிசாவளை பழைய வீதி நீரில் மூழ்கியுள்ளது

Kim Kardashian West drops Kimono brand name

සමන් දිසානායක රෝහල් ගත කෙරේ