வகைப்படுத்தப்படாத

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்….

(UTV|COLOMBO)-வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள்  வரலாற்றில் அழிக்க முடியாததொன்றாகும். யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின்  பின்னரான துரித அபிவிருத்தி என்பன தொடர்பில் பார்க்கின்ற போது, அது அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரானதன் பின்னர்தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை என்பதை பகிரங்கமாக கூறியாக வேண்டும்.

வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக றிசாத் பதியுதீன் தெரிவானது முதல், அவரது பணிகள் வன்னிக்கு மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாக அல்லாது நாடு முழுவதற்கும் பரந்து விரிந்த செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த நிலையில்தான் வன்னி மாவட்ட மக்களது நலன்களை பார்க்க தனக்கு பக்கபலமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதி இருப்பாரென்றால் முழு வீரியத்துடன் சமூகத்தின் தேவைகளை பெற்றுக்கொடுக்க தான் முழுமையாக செயற்பட முடியும் என்ற எண்ணத்தினை கொண்டு ஹூனைஸ் பாருக் என்ற ஒருவரை களமிறக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டார் அமைச்சர் றிசாத் பதியுதீன்,

யார் இந்த ஹூனைஸ் பாருக்………………………………

மன்னார் மாவட்டத்தில் முசலியில் அமைந்துள்ள குக்கிராமமான தம்பட்டை முதலியார்கட்டு என்னும் கிராமத்தில் பிறந்து, அதன் பிற்பாடு குருநாகல் மாவட்டத்திலும், கொழும்பிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இவர், ஆரம்ப தொழிலாக முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் இலிகிதராக பணிபுரிந்தவர். இவ்வாறான நிலையில் இவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அடையாளப்படுத்தியதுடன், வன்னி மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் நியமித்தார் அமைச்சர் றிசாத் பதியுதீன். இந்த நிலையில் ஹூனைஸ் பாருக், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தெரியாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்பை ஏற்படுத்தி தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெறுவதாகவும், தனக்கு பிரதி அமைச்சர் பதவியொன்றினை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தததுடன், இந்த அறிவித்தலை நாமல் ராஜபக்ஷ விடுக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்காமல் முசலியில் தேசிய விளையாட்டு விழாவொன்றினை பிரகடனப்படுத்தி செயற்பட ஆரம்பித்தார். இதனை அறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் அமைச்சர் கலந்துகொள்ளாத தேசிய விழா எவ்வாறு நடத்துவது? என்ற சர்ச்சை ஏற்பட இது நாமல் ராஜபக்ஷவுக்கு சென்ற போது, அவரது சிறிய தந்தையும், அப்போதைய அமைச்ருமான பஷில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வடக்கில் எமக்கு முழுமையான பங்களிப்பு செய்து வரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அனுமதியில்லாமல் எந்த நியமனத்தையும் செய்ய வேண்டாம் என்று கடும் தொனியில் நாமலுக்கு பஷில் ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார்.

இதனுடன் ஆரம்பித்தது தான் ஹூனைஸ் பாருக்கின் சதித் திட்டம். அதன் பின்னர், சந்தர்ப்பம் பாத்திருந்த அவர் பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த போது, இந்த ஹூனைஸ் பாருக், தனிமையாக சென்று ஜக்கிய தேசிய கட்சி மேடையில் ஏறினார். இருந்த போதும் இவரது பலம் தொடர்பில் அறிந்து கொண்ட ஜக்கிய தேசிய கட்சி ஒரு மூலையில் அமரச் செய்துவிட்டனர். பிற்பாடு அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தொடர்பு கொண்டு ஹூனைஸ் பாருக்கின் வருகையால் எவ்வித ஆட்சி மாற்றத்தையும் செய்ய முடியாது என்பதாலும், தங்களின் தலைமையில் ஜக்கிய தேசிய கட்சியில் இணையுமாறும் அழைப்புவிடுத்தார். இதன் பின்னர் அமைச்சர் தலைமையில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர், ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில்தான் மீண்டும் ஹூனைஸ் பாருக் அமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும், இனவாத அமைப்புக்களுடனும் தொடர்பையேற்படுத்தி, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டார். இந்த விடயம் தொடர்பில் பல முறை நாம் சுட்டிக்காட்டி வந்தோம்.

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஹூனைஸ் பாருக் மக்களினால் நிராகரிக்கப்பட்டார். படுதோல்வியினை தழுவினார். அதன் பிற்பாடு அவரது துரோகத்தனம் நின்றபாடிவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹூனைஸ் பாருக், வன்னியில் தேசிய பட்டியலை தமக்குத் தரவேண்டும் என்று அடம்பிடித்த போதும், அது நிராசையாக ஆக்கப்பட்டது. இந்த நிலையில் அரசியலில் அடுத்த அங்கத்துவம் பெரும்பான்மை கட்சியில் சென்று, தான் பெறவேண்டும் என்ற நிலையானதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே தஞ்சம் என்றும், அக்கட்சியினை பிரதி நிதித்துவப்படுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீனை அழிக்கும் கொந்தராத்தினை பெற்றுள்ளதை கடந்தகால மேடைகளில் அவரது உரையினை பார்க்கின்ற போது தெரிகின்றது..

 

 

வன்னி அமைச்சர் றிசாத் பதியுதீன் என்ன அபிவிருத்திகளை முசலிக்கு செய்துள்ளார்? என்று மேடையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாவி மக்களைப் பார்த்து கேள்வி கேற்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஹூனைஸ் பாருக் பணியாற்றியிருந்தால் தானே, அவைகள் அவருக்கு நினைவில் இருக்கும்.

 

அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிக்கு என்ன செய்துள்ளார் …….

Ø தமது வாழ்விடங்கள் பறிக்கப்பட்ட மக்களின் சொந்த மண்ணை மீ்ட்டுக் கொடுத்தமை.

Ø முசலி பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான வீடமைப்பு காணியினை பெற்றுக் கொடுத்தமை.

Ø வெளிநாட்டு மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் வீடுகளை நிர்மாணித்து கொடுத்தமை.

Ø குடிநீர் இணைப்புக்களை பெற்றுக் கொடுத்தமை, கிணறுகளை நிர்மாணித்துக் கொடுத்தமை

Ø மின்சாரம்

Ø உள்ளக பாதைகளை அமைத்துக் கொடுத்தமை.

Ø அனைத்து பாடசாலைகளையும் புதிதாக நிர்மாணித்து கொடுத்தமை.

Ø வைத்திய நிலையங்கள்

Ø பள்ளிவாசல்கள் நிர்மாணித்தமை.

Ø விவசாய குளங்கள் புனரமைப்பு செய்தமை.

Ø அரச நியமனங்கள் பெற்றுக் கொடுத்தமை.

Ø சுயதொழில் உதவிகள் பெற்றுக்கொடுத்தமை.

Ø மீனவர்களின் பிரச்சினை தீர்த்தமை.

Ø அரசியல் உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை முசலி பிரதேச சபைக்கு தெரிவு செய்யும் தளத்தை ஏற்படுத்தியமை

Ø வறிய மக்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தமை எனபன சிலவாகும்.

 

 

 

முசலியில் மட்டும் அல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகமும் இந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிக்கு செய்துள்ள அபிவிருத்திகளை பார்த்து, இப்படிப்பட்ட ஒரு மக்கள் சேவகன் எமது பிரதேசத்திற்கு கிடைக்கவில்லை என்று அங்கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

மற்றுமொரு ஹூனைஸ் பாருக்கின் குற்றச்சாட்டானது கைத்தொழில் அமைச்சராக இருந்தும், முசலிக்கு ஒரு தொழில் பேட்டையினை உருவாக்காமல் வைத்திருப்பது தொடர்பானது.

பதில்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கிற்கு தமது அமைச்சுக்குள் அறையொன்றினை ஒதுக்கி, அதில் இருந்து பணி செய்ய வசதி செய்துகொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன். இப்படியான ஒரு இடத்தில் இருந்த ஹூனைஸ் பாருக் அன்று தொழில் பேட்டையினை முசலியில் அமைக்க என்ன ஆலோசனையினை அமைச்சருக்கு வழங்கினார் என கேட்கவிரும்புகின்றேன். இன்று அரசியல் பிழைப்புக்காக இந்த கேள்வியினை கேட்பது அவர் மக்கள் மீது வைத்துள்ள நடிப்பின் வெளிப்பாடாகவே பார்க்கத் தோனுகின்றது.

ஹூனைஸின் கேள்விக்கு பதில் இருக்காவிட்டால் அது அவருக்கு அவமானமாக இருக்கும். உண்மையினை சொன்னால் அவர் நாக்கை பிடுங்கிக் கொண்டு ஓட வேண்டும். முசலியில் தொழில்பேட்டை அமைக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்த முயற்சிகளை பட்டியில் போடலாம். தனது அமைச்சின் கீழ் இதனை செய்ய முற்பட்டாலும் அதற்கான காணி விடுவிப்பு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி பயன்பாட்டு குழுவின் அனுமதி பெறப்பட்ட போதும், வடமாகாண சபை இதற்கான அங்கீகாரத்தை வழங்க மறுத்துவிட்டார்கள். இதுதொடர்பில் முதலமைச்சருக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் கடிதம் எழுதினார். ஆனால் சாதகமான பதில் இன்று வரை வழங்கப்படவில்லை. அதனை மீறி அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்ற போதும், முதலமைச்சர் அனுமதி வழங்கும் விடயத்தில், எவ்விதமான சாதக பதிலையும் கொடுக்கவில்லை.

2014.07.05, 2014.10.16ஆம் திகதி மற்றும் 2015.07.29 ஆகிய திகதிகளின் அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, மன்னார் அரசாங்க அதிபரினால் மேற்பார்வையில் 36 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் பேட்டையின் பணிகளை ஆரம்பித்தல், 186 மில்லியன் ரூபா செலவில் 3 கைத்தொழிற்சாலை கட்டிடங்களை (கட்டிட நிர்மாண எந்திரவியல் ஆலோசனை பணியகம்) ஊடாக மேற்கொள்ளல்.

இதற்கென 25 ஏக்கர் நிலம் தேவையென முன்மொழியப்பட்டது. இதுதொடர்பில் காணி பயன்பாட்டு தேசிய குழுவினரால் அனுமதியளிக்கப்பட்ட போதும், அவை முடக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இனவாத சக்திகளும் இருப்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த முயற்சியினை தொடராக அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்து வருகின்றார். இதற்கு ஆதரவு அளிக்காமல் கைத்தொழில் பேட்டையினை தடுக்கும் அணியுடன் தொடர்பை கொண்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தேர்தல் காலம் வந்ததும், அம்பாறைக்குச் சென்று அங்குள்ள மக்களை மடையர்கள் என எண்ணி, பிழையான விடயங்களை கூறிவருவது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமது முசலி பிரதேசத்தில் இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்த முடியாத இவர், ஏற்கனவே அரசியலில் வங்குரோத்து நிலையினை சந்தித்து வருகின்ற நிலையில், தமது பேச்சுக்களுக்கு மக்கள் கைதட்டி தன்னை ஒரு ஜனரஞ்சக நிலைக்கு கொண்டுவர எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் தக்க பாடத்தினை அண்மையில் மருதமுனையில் வழங்கியுள்ளனர்.

இந்த நாட்டு முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவராக அங்கீகரித்துள்ள அமைச்சர் றிசாத் அம்பாறைக்கு செய்துள்ள அபிவிருத்திகள் அம்மக்கள் மத்தியில் பொதிந்துள்ளது. துாய்மைான பணியினை மக்கள் பெற்றுவருகின்ற போது, எங்கிருந்தோ வந்து அந்த மக்களுக்கு எதையும் செய்யாத இந்த ஹூனைஸ் பாருக், அப்பட்டமாக அமைச்சரை துாஷித்ததை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

தான் பேசுவது என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்தததையெல்லாம் பேசும் அநாகரீகரமான அரசியல் கலாசாரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் இந்த நிலையில், ஹூனைஸ் பாருக் போன்ற மக்களினால் அரசியலில் இருந்து துரத்தப்பட்டவர்கள் மீணடும் எமது தேசிய தலைமைத்துவத்தை அவமானப்படுத்தும் பணிகளை நிறுத்த வேண்டும் என்பது எல்லோரது எதிர்ப்பார்ப்பாகும்.

 

 

-தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/M-3-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/M-2-1.jpg”]

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்ற இளம் பெண்! வீடு திரும்பவில்லை

ஹட்டனில் கடையடைப்பு குப்பைகளை அகற்றகோரி பாரிய ஆர்பாட்டம்