கேளிக்கை

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து சூர்யாவின் கருத்து

(UTV|INDIA)-விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ உலகமெங்கும் இன்று ரிலீசாக இருக்கிறது. கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் புதிய படம் ரிலீசை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர் என்றால் அது அவர்களது அரசியல் ஆர்வத்தினால் மட்டும் அல்ல. சரியான தெளிவான புரிதலோடுதான் அவர்கள் அரசியலில் இறங்கி உள்ளனர்.
அரசியல் நிலவரம் பற்றி அவர்கள் 2 பேருக்கும் நிறைய தெரியும். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தெளிவான கருத்து, விசாலமான அரசியல் அறிவு படைத்தவர்கள். அரசியல் நிலவரத்தை முழுமையாக அறிந்தவர்கள். அரசியல் பற்றி தெரிந்த பிறகுதான் அவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர்.
எனக்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் நேரிடையாக மலையாள படத்தில் நடிக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள். எனக்கும் மலையாள படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.
எனது மனைவி ஜோதிகா நடித்துள்ள `நாச்சியார்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இவ்வாறு சூர்யா கூறினார்.
சூர்யா நடிப்பில் ஹரி டைரக்‌ஷனில் வெளியான சிங்கம் படம் 3 பாகங்கள் வெளி வந்துள்ளது. இதனால் 4-வது பாகத்திலும் நடிப்பீர்களா? என்று சூர்யாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர், சிரித்துக் கொண்டே பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

Related posts

பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்

அனுஷ்காவை ஏற்க பிரபாஸ் குடும்பம் மறுப்பு

பிரபல பாடகரின் மகன் கைது