வகைப்படுத்தப்படாத

நோயாளர்களுக்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை எதிர்காலத்தில் வான் வழியாகவும் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையின், இரண்டாம் கட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றபோது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தரையில் முன்னெடுக்கப்படும் அவசர அனர்த்த சேவையை போன்று வான்வழி சேவையை முன்னெடுக்க ஆறு உலங்கு வானூர்திகளும் மற்றும் 24 அவசர சேவை வாகனங்களும் கொண்டுவரப்படவுள்ளன.

இதேவேளை, மேலும் ஆயிரத்து 523 நோயாளர் காவுவண்டிகள் கொண்டுவரப்பட இருந்தபோதும், அவை நிறுத்தப்பட்டன.

ஏனெனில், சுவசெரிய நோயாளர் காவுவணடிச் சேவையுடன் இதனை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Navy Apprehends Three with over 2000kg of tobacco & Beedi leaves

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Former DIG Dharmasiri released on bail