வகைப்படுத்தப்படாத

பணத்தை பதுக்கவில்லை- மகிந்த ராஜபக்ச

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் துபாயில் உள்ள கணக்குகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணை பேச்சாளர்களுள் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

துபாயில் மஹிந்தவின் குடும்பத்தினர் வைத்துள்ள சட்டவிரோத வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் விரைவில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்திகள் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதிகளே துபாயில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக 2015ஆம் ஆண்டு முதல் நடப்பு அரசாங்கம் குற்றம் சுமத்திவருகிறது.

எனினும், இந்தக்குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக்ச மறுத்துவருகிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“Sri Lanka keen to expand defence cooperation with Japan” – President

වැටලීම් රාජකාරියේ සිටි පොලිස්ට පහර දුන් සැකකරුවෙකු අත්අඩංගුවට

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஹொலிவூட் நடிகை