வகைப்படுத்தப்படாத

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டில் நாட்டில் டெங்கு என சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 84,442 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக இவர்களில் 41.53 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அத்துடன், ஜூலை மாத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்களின் எண்ணிக்கை 41,121 ஆகும்.

மேலும், 2017ம் ஆண்டு ஜனவரியில் 10,927 நோயாளர்களும், பெப்ரவரியில் 8727 நோயாளர்களும், மார்ச்சில் 13,540 நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 12,510 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, மே மாதத்தில் 15,936 பேருக்கும், ஜூன் மாதத்தில் 25,319 பேருக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 22,270 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் 9514 பேருக்கும், ஒக்டோபர் மாதத்தில் 6594 பேருக்கும், நவம்பர் மாதத்தில் 8814 பேருக்கும், டிசம்பர் மாதத்தில் 9173 பேருக்கும் டெங்கு இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுளம்பு பெருகும் வகையிலான விடயங்களை சூழலில் இருந்து தொடர்ந்தும் அகற்றுவதன் தேவை இதன்மூலம் தௌிவாகியுள்ளது.

மேலும், காய்ச்சல் மூன்று நாட்களுக்கு நீடித்தால் வைத்தியரை நாடுவது அவசியம் என, தொற்று நோய் ஆய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம்: ஒருவர் கைது

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு