வகைப்படுத்தப்படாத

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதியை குறைக்க முடியாது

(UTV|COLOMBO)-கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை குறைக்க தயாரில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

1990 என்ற அவசர நோயாளர் காவுவண்டிச் சேவையின், இரண்டாம் கட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் முதலான துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2018 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடனுக்காக அதிக நிதியை செலவிடவேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனால், செலவுகளை குறைக்க வேண்டுமே தவிர அதிகரிக்க முடியாது.

எனினும், கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை குறைக்க முடியாது.

குறித்த இரண்டு துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை நாட்டில் உணர முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்

தீர்மானமின்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்

கலகெதர மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி இன்று திறப்பு