வகைப்படுத்தப்படாத

பாடசாலை சுற்றாடல் பகுதியில் டெங்கு

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பரவிவரம் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னதாக , அதாவது டிசம்பர் 30 ஆம் 31 ஆம் திகதிகளில் நாடுதழுவிய ரீதியில் பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புகள் அற்ற வலயங்களாக முன்னெடுப்பதற்கு நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெற செய்ய வலய கல்வி பணிப்பாளர்கள், தொகுதி கல்வி பணிப்பாளர்கள் ,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியரகள், ஆலோசகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகள் பங்களிப்பு வழங்கவேண்டும்.

 

இதே போன்று வலய மட்டத்தில் இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்று கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாடசாலை வளவை துப்பரவு செய்ய பெற்றோர் ,முப்படையின்ர ,பொலிஸார் ,சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் பிரதேச சுகாதார வைத்தியர்களின் பங்களிப்பை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனைத்து பாடசாலை முக்கியஸ்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்யும் பணியை முன்னெடுப்பதற்காக பாடசாலை முக்கியஸ்தர்கள் கவனம் வெலுத்தவேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று ஏதேனும் பாடசாலை சுற்றாடல் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் நடைமுறையின் கீழ் தண்டப்பணம் விதிக்கப்பட்டால் அதற்கு பாடசாலை முக்கியஸ்தர் பொறுப்பு கூற வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினால் எம்மால் எதனையும் செய்யமுடியும் – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்

ஈஸ்டர் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்