(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பிரதேசத்திலுள்ள சிறிய மீன்பிடி சமூகத்தினால் பாரம்பரியமாக பின்பற்றப்படும் புகையூட்டிய கருவாடு செயற்பாடுகளில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். எரியூட்டிய விறகுகளின் தணலின் மேல் கம்பி வலைகளை அமைத்து அவற்றின் மேல் மீன்களைப்பரவி புகையூட்டுவதற்கு பல மணி நேரங்களை செலவிடுகின்றனர். புகையைச்சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் அதிகமாயிருப்பினும், மேற்படி கடும் உழைப்பினால் கிடைக்கும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம் (FTT-Thiharoya) மேற்படி நிலமையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
“புதிய போறணையின் அறிமுகத்துடன், எனது நேரத்தை பெருமளவு சேமித்துக்கொள்ள முடிகிறது. முன்னர் இரு நாட்கள் தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மீன்களை உலர்த்தவும்,புகையூட்டவும் காலத்தை செலவிட்டிருந்தேன். இரும்பு வலைகளை நான் முன்னர் பயன்படுத்தியிருந்தேன். தற்போது ஒரு புகைய10ட்டலுக்கு 6 – 7 மணித்தியாலங்கள் போதுமானதாக உள்ளது. எனது பிள்ளைகளை பராமரிக்கவும், வீட்டு பணிகளை கவனிக்கவும் எனக்கு போதிய நேரம் கிடைக்கிறது” என மூன்று பிள்ளைகளின் தாயும், புகையூட்டிய கருவாடு உற்பத்தியில் ஈடுபடுபவருமான கோபாலபிள்ளை தெய்வமலர் தெரிவித்தார்.
2008 முதல்(FTT-Thiharoya) எனும் மேம்படுத்தப்பட்ட மீன்களை புகையூட்டல் மற்றும் உலர வைத்தல் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் முன்னெடுத்திருந்தது. குறித்த தேவைக்கமைய போறணையை கட்டமைக்க முடியும். புகையை வெளியீடும் புகைபோக்கி, எண்ணெய் ஏந்தும் தட்டுகள் மற்றும் இதர உதிரிப்பாகங்களை ஏற்கனவே காணப்படும் போறணைக்கு இணைத்துக்கொள்ள முடியும். இது மீன்களை புகையூட்டும் போது எரிபொருளை சிக்கனப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறியளவிலான மீன்களை உலர வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் பெருமளவானோர் பெண்களாவர். இவர்களின் சுகாதார பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில், சுமார் 150 குடும்பங்கள் புகைய10ட்டிய மீன்கள் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மீன்களை புகைய10ட்டும் பாரம்பரிய செயற்பாடுகள் திறந்த இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் மழை மற்றும் இதர புறக்காரணிகளால் மீன்கள் பழுதடையும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. வலுவான காற்று காரணமாக, புகையூட்டும் நடவடிக்கை தாமதிக்கக்கூடும். பெருமளவான சந்தர்ப்பங்களில் தரம் குறைந்த மீன் உற்பத்திக்கு ஏதுவாக அமைந்துவிடுவதுடன், குறைந்த விலைகளிலும் விற்பனையாகின்றது.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/Press-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/press-3.jpg”]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]