வணிகம்

தென்மாகாணத்தில் இறால் , கடல்நண்டு ஏற்றுமதி களப்பு அபிவிருத்தி

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் முக்கிய களப்பான தங்காலை ,றக்கவ களப்பில் இறால் மற்றும் கடல்நண்டு ஏற்றுமதி களப்பாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக நீர் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நன்னீர் கடற்றொழில் தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தொழில்வாய்ப்பற்ற இளைஞர்கள் மத்தியில் 100 பேர் இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

 

இவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதுடன் தொழிற்துறைக்கு தேவையான நிவாரண உதவிகளும் வசதிகளும் செய்துகொடுக்கப்படவுள்ளன.

 

இத்தாலி ,நியூசிலாந்து, யப்பான் போன்ற நாடுகளுக்கு இறால் மற்றும் கடல்நண்டை ஏற்றுமதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திறகு 10 கோடி ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆயுர்வேத சிகரெட் இலங்கையில் அறிமுகம்

உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை