வகைப்படுத்தப்படாத

ஜனவரி முதல் சந்தையில் பொலிதீன் பேக் தட்டுப்பாடு

(UTV|COLOMBO)-பொலிதீன் மற்றும் லன்ச் சீர் என்பவற்றுக்கு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை அமுல்படுத்த இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில்  அச்சங்கத்திடம் இத்தடை குறித்து வினவியபோதே இவ்வாறு கூறியுள்ளது.

அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய வகை பொலிதீன் பைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய நான்கு, ஐந்து மடங்கு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது. இந்த நிதிச் சுமையை சகல உற்பத்தியாளர்களுக்கும் சுமப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

இதனால், உற்பத்தி குறைந்து, கேள்வி அதிகரிக்கும் போது சந்தையில் இப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Ranjan to call on PM to explain controversial statement

மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகும் ஷின்சோ அபே…

மரண தண்டனை கைதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்