வகைப்படுத்தப்படாத

நான்கு மாவட்டங்களில் இன்று பலத்த மழை

(UTV|COLOMBO)-இரத்தினபுரி , களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இன்றைய தினம் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் நேரங்களில் விட்டு விட்டு மிதமான தூரல் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் விட்டு விட்டு வீசும் காற்று மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இதேவேளை , மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

State of Emergency extended

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்

පාසැල් මලල ක්‍රීඩා උළෙල සාර්ථක කරගැනීමට සමපෝෂ සවිබලය