(UTV|COLOMBO)-இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான முன்மாதிரியான ராஜதந்திர உறவுகள் என்றும் தொடரும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால தெரிவித்துள்ளார்.
இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்திருந்த தடை நீக்கப்பட்டமையானது அந்த நட்புறவை வெளிக்காட்டும் ஒரு உதாரணமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமது டுவிட்டர் கணக்கில் ஜனாதிபதி நேற்று இதனை பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவினால் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திகளுக்காக ரஷ்யா விதித்திருந்த தடை நீக்கப்பட்டமையை அடுத்தே ஜனாதிபதி இந்த பதிவை இட்டுள்ளார்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உள்ளிட்ட விவசாய பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்குவதற்கு ரஷ்யா நேற்று தீர்மானித்தது.
குறிப்பாக தேயிலைக்காக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கையின் தொழில் நுட்ப குழு நேற்று முன்தினம் ரஷ்யா சென்றிருந்தது.
அவர்கள் ரஷ்யா அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து தடை நீக்கம் தொடர்பில் ரஷ்யா அறிவித்ததாக பெருந்தோட்ட துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எஸ்பெஸ்டர் உற்பத்திகள் மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 5 அமைச்சுக்களை சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்று நேற்றைய தினம் ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணமானமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]