கேளிக்கை

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி பாடுகிறார்

(UTV|INDIA)-ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் தனது இசைப்பயணத்தை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுபெற்றது.

இதனையொட்டி இந்தியா முழுவதும் தற்போது இசைக்கச்சேரி நடத்தி வருகிறார், அந்த வரிசையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாட்டு பாட இருக்கிறார்.

வரும் 23-ம் தேதி அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாடுகிறார் என்ற தகவல் கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிரட்டும் Jurassic World: Fallen Kingdom ட்ரைலர் இதோ

நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து ‘கர்ணன்’ தடைப்பட்டது

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் விஜய்