வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் பாலத்திலிருந்து அதிவேக வீதியில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரயில்வே நிறுவனம் இயங்கி வருகின்றது

ஆம்ட்ராக் என்பது அமெரிக்காவில் பொது நிதியில் இயக்கப்படும் ஒரு ரயில்வே நிறுவனம்.

சியாட்டில் பகுதியில் இருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் பயணித்த ரயிலேயே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சியாட்டிலில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் ஆம்ட்ராக் ரயில் ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடிரென தடம்புரண்டு வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரயிலின் 5 பெட்டிகள் அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வீழ்ந்தமையால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அட்டன் மல்லியப்பூ தோட்ட மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் மலர்கிறது : ஸ்ரீதரன் தெரிவிப்பு

மாபோல நகரசபையினால் வீடுகளில் அகற்றப்படும் கழிவுப்பொருட்கள் கொள்வனவு

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் செய்த காரியம்