வகைப்படுத்தப்படாத

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குறைக்கப்பட்ட அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பான வர்த்தாமனி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவினால் கையெழுத்திடப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய 48 ஓளடதங்களின் விலைகள் குறைக்க பட்டிருந்தன.
அதன்போது, அவற்றுக்கான சில்லறை விலை அறிவிக்கப்பட்டதுடன், அவற்றை உரிய விலையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் கையெழுத்திடப்பட்ட, வர்த்தமானிக்கு அமைய குறித்த 48 அத்தியவசிய ஓளடதங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

No evidence to claim IS linked to Easter Sunday attacks – CID

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

තැපැල් වර්ජනය තවදුරටත්