வகைப்படுத்தப்படாத

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?

(UTV|COLOMBO)-பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வரும் தெரேசா மே, லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 28-ம் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா ரெஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் பிரதமர் தெரேசா மேவை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர். லண்டன் வெஸ்ட்மெய்ஸ்டர் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்திய பின்னர் போலீசார் இதனை தெரிவித்தனர். சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை தாக்கி, அவரை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமரின் செய்தி தொடர்பாளர், கடந்த 12 மாதங்களில் 9 தீவிரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

இங்கிலாந்தில் 3 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி

“Bravest team will win first World Cup Semi-Final” – Kohli

பஸ் நடத்துனரால் கொலை செய்யப்பட்ட, பஸ் சாரதி