வகைப்படுத்தப்படாத

வங்கியில் கொள்ளை: வாடிக்கையாளருக்கு துப்பாக்கிச் சூடு

(UTV|HAMBANTOTA)-தங்காலை – குடாவெல்ல பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் சுமார் 50 – 60 இலட்சம் ரூபா வரையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 09.45 அளவில், முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் மீதும், சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், காலில் காயமடைந்த அவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

காலநிலை

இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்