(UTV|COLOMBO)-புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. நேற்று முள்திளம் மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது.
இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும் மறைக்கும் மாஸ்க் அணிந்து விளையாடினார்கள்.
ஒரு கட்டத்தில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து வெளியிட்ட மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா, இத்தகைய சூழலில் எவரும் விளையாட முடியாது என்றார்.
வளியில் பெரிதும் மாசுத் துகள்கள் இருந்தன. இது சுவாசிப்பதில் சிரமத்தையும், இருமலையும் ஏற்படுத்துமென டொக்டர் சக்சேனா குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை இலங்கை வீரர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளானதை பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாசும் ஊர்ஜிதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]