(UTV|AMERICA)- வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணை சோதனை செய்யப்பட்டமை தொடர்பில், சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அதி சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா நேற்று சோதனை செய்திருந்தது.
இது சுமார் 1000 கிலோமீற்றர்கள் வரையில் பயணித்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதன்மூலம் முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்க முடியும் என்றும், வடகொரியா அறிவித்திருந்தது.
இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் ஜனாதிபதி சி ஜிங்பின்னை தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போதுஇ வடகொரியா தமது ஏவுகணை சோதனைகளை நிறுத்தச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப், சீன ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]