கேளிக்கை

தனது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்

(UTV|INDIA)-விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிகேஷ் ராம் என காமெடி கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து விஷ்ணு விஷால் – எழில் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஈஷான் புரொடக்‌ஷன் சார்பில் துஷ்யந்த்.ஆர்.ஜி மற்றும் அபிராமி துஷ்யந்த் தயாரிக்கின்றனர்.

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் தற்போது `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, `ராட்சஸன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பலியானார்

யூடியூபில் புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’

ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இந்த பெண் யார்?