வகைப்படுத்தப்படாத

வடக்கில் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது பணி பகிஸ்கரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று புதன்கிழமையும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

இப் பணிப்புறக்கணிப்பால் பருவச்சீட்டில் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

கொழும்பில் போக்குவரத்து சபை பணியகத்தில் நேற்று மாலை இதுபற்றி பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

எனினும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததால் இப்பணி பகிஸ்கரிப்பு இன்று புதன்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இன்றைய தினம் சாதகமன முடிவு எட்டப்படலாம் என வடபிராந்திய போக்குவரத்து சபை அதிகாரி  தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தென்கொரிய பாப் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த கிம் ஜாங்-உன்

Sri Lanka, West Indies fined for slow over rate

Luxury goods join Hong Kong retail slump as protests bite