வகைப்படுத்தப்படாத

டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-மேல் மாகாணம் உட்பட நாட்டின் மேலும் சில மாவட்டங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், காலி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாராப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் குறித்த மாவட்டங்களில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கத்தை சமூகத்தில் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 107,000 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை டெங்கு நோய் காரணமாக இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Sri Lanka urged to release Ukrainian Captain after three years of detention

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?