(UTV|COLOMBO)-2018, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டி நிகழ்வினை இலக்காகக் கொண்டு இலங்கையில் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் இலங்கைப் போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி இரண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை மெய்வாண்மை சங்கத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் பாலித்த பெர்னான்டோ தெரிவித்தார்.
நிகழ்வில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி வழங்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.