வகைப்படுத்தப்படாத

678 பேர் எயிட்ஸ் நோயினால் இறப்பு

(UTV|COLOMBO)-இவ்வருடத்தின் இரண்டாவது காலப்பகுதியில் எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 678 என்று தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

HIV வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நேற்று ஆரம்பமானது. டிசம்பர் முதலாம் திகதி இடம் பெறும் எயிட்ஸ் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

 

இதற்கான முதலாவது நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

குடும்ப சுகாதார அமைப்பு ஆபத்தான மருந்து கட்டுபாட்டு தேசிய சபை மற்றும் HIV உடன் வாழ்வோரின் சங்கத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

HIV வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2688 என்று தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

லண்டன் கட்டிட தீ விபத்து – பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில்…

மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Met. predicts spells of showers today