(UTV|AMERICA)-வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
சமீப காலமாக வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.
இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறது என கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், வடகொரியா தொடர்ந்து அணு சோதனை நடத்தி வருகிறது. அத்துடன் அந்த நாடு தீவிரவாதத்தையும் ஆதரிக்கிறது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளான ஈரான், சிரியா, சூடான் ஆகிய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டம் தீட்டி வருகிறது என தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.