வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை – சி.வி

(UDHAYAM, COLOMBO) – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ் மக்களின் அடிமட்டப் பிரச்சினைகள் குறித்து தமிழ்மொழியில் நாடாளுமன்றத்தில் உரையாற்றப்படுகிறன.

தமிழ் புரியாத சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதாகவே மொழிப்பெயர்ப்புக்கு செவி கொடுக்கின்றனர்.

அத்துடன், ஆங்கில மொழியும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புரிவதில்லை.

இதனால் அந்த பிரச்சினைகள் குறித்த விளக்கம், சென்றடைய வேண்டிய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய வகையில் சென்று சேர்வதில்லை.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Microsoft நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உரத்தை விநியோகிக்க விரிவான நடவடிக்கை

கடும் பனிப்புயலினால் 1600 விமானங்கள் ரத்து