கேளிக்கை

‘ஐட்டம் போய்’ என்று அழைத்ததால் நமீதா மீது கடுப்பான ஆரவ்

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ்நிகழ்ச்சியில் நேற்று பிரபல கவர்ச்சி நடிகை நமீதா மீது சக போட்டியாளரான ஆரவ் கோபத்தில் இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஆரவ் மீது அனைவருக்கும் ஒரு பார்வை இருந்தது. இந்நிலையில் நடிகை ஓவியா ஆரவ்வை காதலிப்பது போல அவர் பின்னாடியே சுற்றியது நிகழ்ச்சியை பார்க்கும் பலரையும் ரசிக்க வைத்தது.

ஆனால் ஆரவ், ஓவியாவின் காதல் வலையில் விழவில்லை. இந்த சூழலில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலிக்கு நடிகர் ஆரவ் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.

இதனால், பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நடிகர் ஆரவ்வை கிண்டல் செய்து ஜாலியாக மகிழ்ந்தனர். நடிகர் ஆரவ்வும் அதனை ஜாலியாக எடுத்துக்கொண்டார்.

ஆனால் நேற்று, நடிகர் ஆரவ் காயத்ரி ரகுராமிடம் நமிதா தன்னை அழைத்த விதத்தை கூறி கோபப்பட்டு வருந்தினார்.

பல முறை நமிதா தன்னை வாட்ச் மேன் எனவும், ஐட்டம் போய் எனவும் கூறியதாக தெரிவித்தார்.

அவரது வயதுக்கு மரியாதை இல்லை, அவருடைய அனுபவத்துக்கு தான் மரியாதை அளிக்கிறேன் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் நேற்று நடந்த வெளியேற்றுதலிக்கான நாமினேஷனிலும் ஆரவ் நமிதாவை தெரிவு செய்தார்.

Related posts

பிரபல பாடகி காலமானார்

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு

வால்டர் ட்ரைலர் வெளியாகியது