விளையாட்டு

பிரபல கிரிக்கட் வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை!

(UDHAYAM, COLOMBO) – மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டிசோபேவுக்கு அந்நாட்டு கிரிக்கட் வாரியம் 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக லோன்வாபோ டிசோபே மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கட் வாரியம் நடத்திய விசாரணையில் டிசோபே மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டை மறுத்த டிசோபே, விசாரணையின்போது குற்றச்சாட்டைப் ஒப்புக்கொண்டார்.

கடும் நிதி நெருக்கடியில் தவித்ததால், மேட்ச் பிக்ஸிங் புரோக்கர்களில் வலையில் தாம் விழுந்துவிட்டதாகவும், நடந்த செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோருவதாகவும் டிசோபே தெரிவித்துள்ளார்.

டிசோபேவுக்கு விதிக்கப்பட்ட தடை 2017 ஏப்ரல் 24ம் திகதி முதல் விதிக்கப்படுவதாகவும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கட் வாரியம் அறிவித்துள்ளது.

Related posts

மேற்கிந்தியத்தீவுகள் 99 ஓட்டங்களினால் முன்னிலை

ஆட்ட நிர்ணய விசாரணைகளுக்கு உபுல் தரங்கவுக்கும் அழைப்பு

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்