வகைப்படுத்தப்படாத

அரச சேவையில் பட்டதாரிகள்

(UDHAYAM, COLOMBO) – ஒருவருட பயிற்சிக் காலத்திற்கு உட்பட்டவாறு மாவட்ட அடிப்படையில் பட்டாரிகள் சேர்க்கப்படவுள்ளனர். இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கியுள்ளது..

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் அடங்கலாக அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்பு பற்றி முகாமைத்துவ திணைக்களம் தீர்மானங்களை எட்டும். அதனை அடுத்து, இனங்காணப்பட்ட பதவி வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பட்டதாரிகளின் சேவையை பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்

Related posts

Muslim Parliamentarians to accept Ministerial portfolios again

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி